உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்

குழாய் விரிசலால் வீணாகும் குடிநீர்

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளுக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாக குடிநீர் வினியோகம் நடக்கிறது. தற்போது நரசிங்கபுரம் கணக்கம்பட்டி சாலை வழியாக செல்லும், காவிரி கூட்டு குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு அதிகமான தண்ணீர் அருகில் உள்ள வீடுகள் முன்புறம் தேங்கி வருகிறது. மேலும் அதிகமான தண்ணீர் வீணாகிறது. வெயில் காலங்களில் கிராமப்புற மக்களுக்கு காவிரி நீர் சரி வர கிடைக்காமல் உள்ளது. எனவே, விரிசல் அடைந்த குழாயை சரி செய்து மக்களுக்கு தங்கு தடையின்றி குடிப்பதற்காக தண்ணீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி