உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் - ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்குகளால் கடும் அவதி

கரூர் - ஈரோடு சாலையில் எரியாத சிக்னல் விளக்குகளால் கடும் அவதி

கரூர்: கரூர்-ஈரோடு விரிவாக்க சாலையில், சிக்னல் விளக்குகள் எரியா-ததால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர்-ஈரோடு சாலை வழியாக ஈரோடு, திருப்பூர் மாவட்டங்க-ளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்கின்-றன. ஆத்துார் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் செயல்ப-டுவதால், ஈரோடு சாலை வடிவேல் நகர் முதல், ஆத்துார் பிரிவு வரை, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், சாலை விரிவாக்க பணிகள் நடந்தது.பிறகு, ஆத்துார் பிரிவில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த, கம்-பங்கள் போடப்பட்டு சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால், சிக்னல் கம்பத்தில் உள்ள விளக்குகள் எரிவது இல்லை. இதனால், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள கரூர்-ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவு பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகிறது.இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிய விரிவாக்க சாலையில், சிக்னல் கம்பங்-களில் உள்ள, விளக்குகள் எரியும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை