உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொள்ளு செடிகள் செழிப்பு

கிருஷ்ணராயபுரம் பகுதியில் கொள்ளு செடிகள் செழிப்பு

கிருஷ்ணராயபுரம், டிச. 27-கிருஷ்ணராயபுரம் பகுதியில், மானாவாரி நிலத்தில் கொள்ளு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமணம்பட்டி, பழையஜெயங்கொண்டம், புதுப்பட்டி, கணக்கம்பட்டி, வயலுார், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, நடுப்பட்டி, சரவணபுரம், வரகூர், மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கொள்ளு சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், கொள்ளு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. மேலும், செடிகளுக்கு போதிய ஈரப்பதம் இருப்பதால், ஊக்கத்துடன் வளர்ந்து வருகிறது. இதனால், ஓரளவு மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை