உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடலுாரில் மாரியம்மன் கோவில் திருவிழா

கூடலுாரில் மாரியம்மன் கோவில் திருவிழா

குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கூடலுார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாயொட்டி கிராம மக்கள், பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து, ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு ஊற்றி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.மேட்டுமருதுார் காட்டு வாரியில் கரகம் பாலித்து, முக்கிய வீதிகள் வழியாக வீடுகள் தோறும் பூஜை பொருட்கள் வாங்கி, சுவாமி அதிகாலையில் கோவில் வந்தடைந்தது. நேற்று மதியம் மேட்டுமருதுார் வினாயகர் கோவில் முன், பக்தர்கள தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் அக்னி சட்டி, அலகு குத்துதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை துாக்கி செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் இரவு மாவிளக்கு எடுத்தல், வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி