உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுபான்மை மக்கள் குழு ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மக்கள் குழு ஆர்ப்பாட்டம்

கரூர்:தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் ேஹாச்சுமின் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், பா.ஜ., ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமாக பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., - சங்பரிவார் அமைப்புகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், செயலாளர் கல்யாண சுந்தரம், மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலாளர் ஜோதிபாசு,சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி, சிறுபான்மை மக்கள் குழு மாவட்ட செயலாளர் ராஜா முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி