| ADDED : ஜூன் 14, 2024 01:33 AM
அரவக்குறிச்சி, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் இஸ்லாமியர்கள் குர்பானிக்கு ஆடு வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில், 40,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். வரும், 17ல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில், இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ஒன்று முதல் மூன்று ஆடுகளுக்கும் மேல் குர்பானி கொடுப்பர். தற்போது, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி இஸ்லாமியர்கள் குர்பானிக்கு ஆடுகள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 12 கிலோவில் இருந்து, 22 கிலோ வரை எடையுள்ள ஆடுகள், 15,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் விலை அதிகரிக்கும் என, ஆடு விவசாயிகள் தெரிவித்தனர்.ஆண்டுதோறும், பக்ரீத் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, பள்ளப்பட்டியில் சிறப்பு ஆட்டுச்சந்தை நடக்கும். இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆடு வியாபாரிகள், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக வளர்க்கப்பட்ட ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.