உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஜவகர் பஜார் கோவில் இடத்திற்கு நோட்டீஸ்

ஜவகர் பஜார் கோவில் இடத்திற்கு நோட்டீஸ்

கரூர்: ''கரூர், ஜவகர் பஜாரில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 105 இடங்களில் ஆக்கிரமிப்பு எடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்-பட்டு வருகிறது,'' என, திருத்தொண்டர் பேரவை தலைவர் ராதா-கிருஷ்ணன் தெரிவித்தார்.கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் வகையில், அரசு அதிகாரிகள் உதவியுடன் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில், 4,000 ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என கண்டறியப்பட்டது. அதை மீட்க நடவ-டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடங்-களை வாங்கி யாரும் ஏமாற வேண்டாம். கரூர் கல்யாண பசுப-தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஜவகர் பஜாரில் உள்ள, 105 இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்ற, ஹிந்துசமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையரால் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்-டுள்ளது.இந்த ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்றப்படும். கரூர் வெண்ணை-மலை பாலசுப்ரமணியர் கோவில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவில் நில ஆக்-கிரமிப்பு நிலதாரர்கள், சட்ட ரீதியாக பிரச்னையை அணுக வேண்டும். அரசியல்வாதிகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி