உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி

சாலை அமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதி

குளித்தலை: குளித்தலை, மருதப்பிள்ளை தெருவில் சிமென்ட் சாலை அமைப்பதற்காக தோண்டப்-பட்டு, 10 நாட்களுக்கு மேலாகியும் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.இதனால், இப்ப-குதி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்-ளனர். மேலும், குளித்தலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருப்பதால். இந்த சாலையை தான் பொது மக்கள் பயன்படுத்துவர். இந்த சாலை பொதுவான சாலையாக இருந்து வருகிறது. எனவே, நக-ராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தரமான சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள், கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி