உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்: 3 பேர் மீது போலீசார் வழக்கு

அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்: 3 பேர் மீது போலீசார் வழக்கு

கரூர்: கரூரில், அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக, பல்வேறு அமைப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின், நினைவு நாள் நிகழ்ச்சி, நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி, நேற்று முன்தினம் கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கரூர் மாவட்ட கொ.ம.தே.க., செயலாளர் மூர்த்தி, கொங்குநாடு இளைஞர் பேரவை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமிழ் செல்வன் ஆகியோர், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்களை வைத்-தனர். அதேபோல், மன்னர் வல்வில் ஓரி அரசு விழாவுக்காக, புதிய திராவிடர் கழக நகர செயலாளர் கொங்கு அருள், கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.இதுகுறித்து புகார்படி, மூர்த்தி, தமிழ்செல்வன், கொங்கு அருள் ஆகியோர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை