உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொபைல்போனில் மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு

மொபைல்போனில் மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்கு

குளித்தலை, குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் காணியாளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 48, கூலி தொழிலாளி. இவர் அய்யர்மலை கிரிவலம் ரோடு, சண்முகா நகர் மனையில், 89, 90 ஆகிய இரண்டு வீட்டு மனைகள் வாங்கி, அதில் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த, 29 மதியம் 1:00 மணிக்கு மர்ம நபர் ஒருவர், வீட்டை அகற்றி விட வேண்டும் என மிரட்டல் விடுத்தார். அதேபோல், மற்றொரு மொசெல்போனில் இருந்தும் மிரட்டல் விடுத்தனர். மறுநாள் பார்த்தபோது, ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை அகற்றப்பட்டு, அனைத்து பொருட்களும் திருட்டு போனது.இது குறித்து, பாலசுப்பிரமணியன் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் இரண்டு மொபைல் எண்களில் இருந்து பேசிய மர்ம நபர்கள் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ