மேலும் செய்திகள்
ரூ.4.03 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
18-Dec-2025
சாலை விரிவாக்க பணி அதிகாரிகள் ஆய்வு
18-Dec-2025
சாலையோர மரக்கன்றுகள் பராமரிப்பு பணி மும்முரம்
18-Dec-2025
குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு
18-Dec-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த, காணியாளம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:காணியாளம்பட்டியில் செயல்பட்டு வரும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் (இரு பாலர்) 2024-25ம் ஆண்டிற்கான நேரடியாக இரண்டாம் ஆண்டு பயில்வதற்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதள முகவரியில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முகவரி வாயிலாக வரும், 20ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஐ,டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்யலாம். பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது ஐ.டி.ஐ., மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவ மாணவிகள் மேலே குறிப்பிட்டுள்ள, இணையதள முகவரி வாயிலாக பதிவேற்றம் செய்து வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் மற்றும் சிறப்பு பிரிவினராக இருந்தால் அதற்கான சான்றிதழ், விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினரை தவிர மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். இந்த விண்ணப்ப கட்டணங்களை, கல்லுாரி குறியீட்டு எண், 123 என்று குறிபிட்டு டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம். மேலும் இணைய தள முகவரி வாயிலாக விண்ணபிக்க இயலாத மாணவ மாணவிகள், கல்லுாரிக்கு நேரடியாக வந்தோ அல்லது இ.சேவை மையங்கள் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம்.மேலும் சந்தேகங்களுக்கு, 9080078337, 9894833871, 8637633515, 9003088214,9944738083 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.
18-Dec-2025
18-Dec-2025
18-Dec-2025
18-Dec-2025