உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாமக்கல் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 1.34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்

நாமக்கல் ஆவின் மூலம் நாளொன்றுக்கு 1.34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்

நாமக்கல்: ''நாமக்கல் ஆவின் மூலம், நாளொன்றுக்கு, 1.34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா கூறினார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுாரில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அமைந்துள்ளது. அங்குள்ள கம்ப்ரசர் இயந்திரத்தின் இயக்கம், பால் தரத்தை பரிசோதனை செய்ய அமைக்கப்பட்-டுள்ள, கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பரிசோதனை இயந்திரம், சேமிப்பு கலன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். தொடர்ந்து, பரமத்தி நெடுஞ்சா-லையில் உள்ள ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அவர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், 480 கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிரா-மப்புறங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சராசரியாக நாளொன்றுக்கு, 1.34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்-படுகிறது. இந்த பால், 38 வழித்தடங்கள் மூலம், லாரிகளில் கொண்டுவரப்பட்டு, நாமக்கல் லத்துவாடி பால் குளிரூட்டும் நிலையத்தில், 47,000 லிட்டர், ப.வேலுார் பால் குளிரூட்டும் நிலையத்தில், 37,000 லிட்டர் குளிரூட்டப்படுகிறது. மேலும், 16 தொகுப்பு பால் குளிர்விப்-பான்களிலிருந்து, 50,000 லிட்டர் பால் குளிரூட்டப்பட்டு விற்ப-னைக்கும், உபபொருட்கள் தயாரிக்க, சேலம், சென்னை ஆவி-னுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.நாமக்கல் ஆவின் ஒன்றியத்தில், 282 பால் ஏஜன்ட்கள், 58 பாலக ஏஜன்ட்கள், ஒட்டு மொத்த விற்பனை ஏஜன்ட்கள் மூலம், தினமும், 80,000 லிட்டர் பால், மாதம் ஒன்றுக்கு சராசரியாக, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், பால் உபபொருட்கள் விற்பனை செய்-யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை