மேலும் செய்திகள்
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
07-Sep-2024
கால்வாயில் தத்தளிக்கும் இளம்பெண்: வைரல் வீடியோ
31-Aug-2024 | 1
கரூர்: ?????அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 524 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 259 கன அடியாக குறைந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 89.50 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து, தடுப்பணை வறண்டு காணப்படுகிறது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 22,128 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 21,394 கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக, 20,317 கன அடி தண்ணீரும், தென்கரை பாசன வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு, 1,420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 22.89 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
07-Sep-2024
31-Aug-2024 | 1