உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி ரத்து மூவருக்கு ரூ.50,000 இழப்பீடு

ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி ரத்து மூவருக்கு ரூ.50,000 இழப்பீடு

கரூர்:இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த, சென்னையை சேர்ந்த நிறுவனம், கரூரை சேர்ந்த மூன்று பேருக்கு இழப்பீடு வழங்க கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கரூர், சின்ன ஆண்டாங்கோவில் திருப்பதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வின், மணிகண்டன், சுப்பிரமணியம். இவர்கள் கடந்த ஆண்டு ஆக., 12ல் சென்னையில் நடக்கவிருந்த, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க, 12,000 ரூபாய் கட்டி இருந்தனர். ஆனால், இசை நிகழ்ச்சி நடக்கவில்லை. இதனால், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த, ஏ.சி.டி.சி., ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தது. ஆனால், பணம் தரவில்லை.அஸ்வின், மணிகண்டன், சுப்பிரமணியம் ஆகியோர், கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கட்டண தொகை மற்றும் சேவை குறைபாட்டுக்காக, 50,000 ரூபாயை ஏ.சி.டி.சி., ஸ்டூடியோ பிரைவேட் நிறுவனம் வழங்க வேண்டும் என, வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது, ஏ.சி.டி.சி., நிறுவனத்தினர் ஆஜராகவில்லை.விசாரித்த, கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாட்டுக்காக ஏ.சி.டி.சி., ஸ்டூடியோ பிரைவேட் நிறுவனம், 12 சதவீத வட்டியுடன் கட்டண தொகை, 12,000 ரூபாய், மன உளைச்சல், சேவை குறைபாட்டுக்காக, 50,000 ரூபாய், வழக்கு செலவுக்காக, 5,000 ரூபாயை மூன்று பேருக்கும் வழங்க வேண்டும் என, நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பாரி, உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ