உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடசேரி காற்றாற்றில் மணல் கடத்தல்

வடசேரி காற்றாற்றில் மணல் கடத்தல்

குளித்தலை :குளித்தலை அடுத்த, வடசேரி பஞ்., பொது பணித்துறைக்கு சொந்தமான, காற்றாற்று ஆறு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து பில்லுார், வடசேரி, புழுதேரி ஆகிய பஞ்., வழியாக செல்கிறது. காற் றாற்றில், வடசேரியில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக இயந்திரம் உதவியுடன் மணல் கடத்தி, பல்வேறு மாவடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தோகைமலை ஆர்.ஐ., முத்துக்கண்ணு, மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்து அனுப்புமாறு, வடசேரி வி.ஏ.ஓ.,கணேசனுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆய்வு செய்து, மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக வி.ஏ.ஓ.,கணேசன், ஆர்.ஐ.,க்கு அறிக்கை சமர்பித்துள்ளார். இதேபோல், புத்துார், கள்ளை பஞ்., அரசு குளத்தில் மணல், வண்டல் மண், கிராவல் மண் கடத்தும் தொழில் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து குளித்தலை தாசில்தார் சுரேஷ் கூறுகையில்,'' வடசேரி காற்றாற்றில் மணல் கடத்துவதாக, வடசேரி வி.ஏ.ஓ., அறிக்கை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை