உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா

அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா

கரூர்: கரூர் மாவட்ட, விஸ்வ ஹிந்து பரிசத் சார்பில், அமராவதி ஆற்றில் சீர் அனுப்பும் விழா, நேற்று மாலை நடந்தது. அதில், அமராவதி ஆற்றில் ஆண்டு முழுதும் தண்ணீர் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, புடவை, பூக்கள், பழங்கள், வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களுடன், மண் விளக்கில் தீபம் ஏற்றி, அமராவதி ஆற்றில் விடப்பட்டது.நிகழ்ச்சியில், மாநில விஸ்வ ஹிந்து பரிசத் சேவா பிரிவு பொதுச்செயலாளர் பாலு, திருப்பூர் கோட்ட செயலாளர் விஜய், கரூர் மாவட்ட செயலாளர் கொங்குவேல், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாரத், நகர பொறுப்பாளர் ஓம்சக்தி சேகர் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மங்கள பொருட்களுடன், பெண்கள் அமராவதி ஆற்-றுக்கு ஊர்வலமாக சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை