உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஸ்ரீ சங்கரா வித்யாலயா மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

ஸ்ரீ சங்கரா வித்யாலயா மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை

கரூர்: -கரூர், ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளி மாணவர்கள், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 சி.பி.எஸ். இ., பொதுத்தேர்வு, ஜே.இ.இ., (மெயின்) தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் குருசரண், 500 மதிப்பெண்ணுக்கு, 496 மதிப்பெண் பெற்று, மாவ ட்ட அளவில் முதலிடமும், மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். நவதீப், 494 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஷிவானி, 483 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தை பெற்றுள்ளார். தமிழ் பாடத்தில், 10 மாணவர்கள், கணிதத்தில் நான்கு மாணவர்கள், 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல், 32 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல், 83 பேரும் பெற்றுள்ளனர்.பிளஸ் 2 வகுப்பு சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில், 500 மதிப்பெண்ணுக்கு, 484 மதிப்பெண்கள் பெற்று ராகுல் கண்ணா பள்ளியில் முதலிடம், அருணேஷ், 480 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ரோகிணி, 471 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தை பெற்றுள்ளனர். கணினி பாடத்தில் ஒரு மாணவரும், உயிரியியல் பாடத்தில் ஒரு மாணவரும், 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல், 13 பேர், 400 மதிப்பெண்களுக்கு மேல், 40 பேர் பெற்றுள்ளனர்.2024ம் ஆண்டிற்கான ஜே.இ.இ., (மெயின்) தேர்வில் சதவீத அடிப்படையில் ஏ.ஆர். சிவி (99.63), ராகுல் கண்ணா (99.57), அருணேஷ் (99.36), ராஜ் கவுதம் (98.94), சரண் (97.81), குரு கணேஷ் (95.14), கபில் (94.77), தனுஜ் (94) மதிப்பெண்கள் பெற்று, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவி கள், ஆசிரியைகளை பள்ளி நிறுவனர் எஸ்.பழனிசாமி, தாளாளர் பி.அசோக்சங்கர், செயலாளர் பி.ஆனந்த் சங்கர், பள்ளி முதல்வர் பி.வி.எம். காமேஸ்வர ராவ் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை