உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பனை மரங்கள் வளர்ப்பு ஊக்குவிக்க நடவடிக்கை தேவை

பனை மரங்கள் வளர்ப்பு ஊக்குவிக்க நடவடிக்கை தேவை

க.பரமத்தி, க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்தன. பனை மரங்களின் ஓலை கால்நடைகளுக்கு தீவனமாகவும், வீடு கட்டவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் பனை பொருட்களான நுங்கு, பதநீர், பனங்கருப்பட்டி, பனை போன்றவை ஆரோக்கியமான உணவாக இருந்து வந்தது.பனை ஓலைகளில் இருந்து விசிறி, பெட்டி பாய், மெத்தை போன்றவை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். தற்போது மக்களிடையே பனை பொருள்களுக்கு வரவேற்பில்லை. இதனால் விவசாயிகள் பனை மரங்களை செங்கல் சூளைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.எனவே, நல வாரியம் அமைத்து பனை மரம் வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்