உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையில் முள் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

சாலையில் முள் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டியில் உள்ள சாலையில், முள் செடிகள் வளர்ச்சியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வேங்காம்பட்டி கிராமத்தில் நுாலக சாலை உள்ளது. இந்த சாலை வேங்காம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி முதல், பாலப்பட்டி பிரிவு வரை செல்கிறது. தற்போது பிரிவு சாலையின் இருபுறமும், அதிகளவு முள் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அச்சத்துடன் செல்கின்றனர். இரவு நேரங்களில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், கீழே சிலர் தவறி விழுகின்றனர். ஆகையால் சாலையில் வளர்ந்து வரும் முள் செடிகளை, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !