உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாய்க்கால் தடுப்புச்சுவர் தேசம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை

வாய்க்கால் தடுப்புச்சுவர் தேசம் புதுப்பிக்க நடவடிக்கை தேவை

கிருஷ்ணராயபுரம்;மாயனுார், தண்ணீர் பாலம் அருகில் வாய்க்கால் தடுப்புச்சுவர் சேதம் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றில் இருந்து, கட்டளை வாய்க்கால் செல்கிறது. தண்ணீர் பாலம் அருகில் வாய்க்கால் அருகில் தடுப்புச்சுவர் உள்ளது. தற்போது சுவர்களின் கற்கள் பெயர்ந்து இடிந்து கிழே விழுந்து கிடக்கிறது. வாய்க்காலில் அதிகமான தண்ணீர் வரும் போது, கற்கள் பெயர்ந்த இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாய்க்கால் கரைகள் சரிந்து சேதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த வாய்க்கால் கரைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை