உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திடீர் பூட்டு

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு திடீர் பூட்டு

கரூர்: கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக நுழைவு வாயில் கேட்டுக்கு, நேற்று திடீரென பூட்டு போடப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.கரூர்-வெள்ளியணை சாலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்படுகிறது. அதில், புதிய வாகன பதிவு, புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று காலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட், திடீரென பூட்டப்பட்டது. இதனால், பல்வேறு பணிகளுக்காக, காரில் வந்தவர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமல் பெரும் அவதிப்பட்டனர்.டூவீலர்களில் வந்தவர்கள் மட்டும், கேட்டின் இடைப்பகுதியில் மூலமாக வெளியே சென்றனர்.இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கூறியதாவது: வாகனங்கள் பதிவு, புதுப்பித்தல், ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் வராமல், காலதாமதமாக வருகின்றனர். இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக பொதுமக்கள் வர வேண்டும் என்பதற்காக, காலை நேரத்தில் மட்டும், நுழைவு வாயில் கேட் சிறிது நேரம் மட்டும் பூட்டப்படும். பிறகு, வழக்கம் போல் கேட் திறந்து இருக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ