உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை ரயில்வே சுரங்க பாதையில் நீர் தேங்குவதால் அவதி

லாலாப்பேட்டை ரயில்வே சுரங்க பாதையில் நீர் தேங்குவதால் அவதி

கரூர்:லாலாப்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டையில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக வாகன ஓட்டிகள், லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் வரை செல்கின்றனர். தற்போது ரயில்வே சுரங்கப்பாதையில், அதிகமான தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வப்போது, பஞ்சாயத்து நிர்வாகம் மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகிறது. தற்போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், கீழே தவறி விழுந்து காயமடைகின்றனர். தண்ணீரை முழுமையாக அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ