உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் வட்டாரத்தில் கோடை மழை

கரூர் வட்டாரத்தில் கோடை மழை

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை மழை பெய்தது.தென்னிந்திய பகுதிகளில், மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும், கன்னியாகுமரி கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தமிழகத்தில் நேற்று முதல் வரும், 19 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை மையம், நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 5:30 மணி முதல் கரூர் நகரம், திருமாநிலையூர், பசுபதிபாளையம், வெங்கேமடு, காந்தி கிராமம், தான்தோன்றிமலை, திருகாம்புலியூர், கொள ந்தானுார், தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 6:00 மணி வரை மழை பெய்தது.கடந்த, 15 நாட்களாக கரூர் நகரில் நாள்தோறும், 100 டிகிரி முதல், 110 டிகிரி வரை கோடை வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், நேற்று மாலை பெய்த மழையால், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி