உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,ல் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்.,ல் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கரூர்;கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்சாயத்து பகுதிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தங்கவேல், நேரில் ஆய்வு செய்தார்.ஆத்துார் பூலாம்பளையத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் தேர்வான பயனாளிகளின் வீடு கட்டுவதற்கு தேர்வான இடத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழுக்கள் கோழி வளர்ப்புக்கான கூடாரம், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பணியையும், சரஸ்வதி என்பவரின் விவசாய நிலத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் மண் வரப்பு அமைக்கப்பட்ட பணிகளையும் கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை