மனைவி நல வேட்பு விழா
கரூர்: புகழூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா, புகழூர் பசுபதி நகர் மன்றத்தில் நடந்தது. அதில், 75 க்கும் மேற்பட்ட தம்பதியர் மாலை மாற்றி, ஒருவர் மேல் ஒருவர் கை வைத்து, கண்களை மூடி காந்த பரிமாற்ற தவம் புரிந்தனர். பிறகு, கணவன்-மனைவி உறவுகள் குறித்து, பேராசி-ரியர் ராஜேந்திரன் விளக்கம் அளித்து பேசினார்.புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.