உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளியணை சாலை ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

வெள்ளியணை சாலை ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

கரூர் : கரூர் அருகே வெள்ளியணை சாலையில், திருச்சி தேசிய நெடுஞ்சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்கல்லுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.வெள்ளியணை சாலையில் பாலத்தின் கீழ் பகுதியில், இரு புறமும் இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலை பிரிவில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. அதில், உயர் கோபுர மின் விளக்குகள் இல்லை.இதனால், கரூரில் இருந்து வெள்ளியணைக்கு செல்ல வேண்டியவர்கள், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கரூர் செல்ல வேண்டியவர்கள், வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் தடுமாறுகின்றனர். மேலும், வழிகாட்டி பலகை, இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததால், திருச்சி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வெள்ளியணை சாலை பகுதியில், அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானா பகுதியில், உயர்மட்ட மின் விளக்குகள் அமைக்க, நெடு ஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை