உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விபத்தில் பெண் படுகாயம் போலீசார் விசாரணை

விபத்தில் பெண் படுகாயம் போலீசார் விசாரணை

அரவக்குறிச்சி, புகழூர் அருகே சுண்டமேடு பகுதியை சேர்ந்தவர் எட்வின் சாமுவேல் என்பவரது மனைவி பரிமளா, 41. இவர் நேற்று, கரூர் கோவை சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். க.பரமத்தி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சிறுபனையூரை சேர்ந்த கார்த்திகேயன், 19, என்பவர் ஓட்டி வந்த சாலை அமைக்க பயன்படுத்தப்படும், பேவர் மிஷின் வாகனம் பரிமளா ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதியது.இந்த விபத்தில், வாகனத்துடன் கீழே விழுந்த பரிமளாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.பரிமளா அளித்த புகார்படி, க.பரமத்தி போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை