உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம் விழிப்புணர்வு பேரணி

உலக ஓசோன் தினம்விழிப்புணர்வு பேரணிகரூர், செப். 17-தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் கரூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், உலக ஓசோன் தினத்தையொ ட்டி விழிப்புணர்வு பேரணி, வெள்ளியணையில் நேற்று நடந்தது. வெள்ளியணை, அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை, போலீஸ் எஸ்.ஐ., சசிகலா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் புகை வெளியிடுதலை கட்டுப்படுத்த வேண்டும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், குப்பை எரிக்காமல் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கொண்டு சென்றனர். பேரணியில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம், பசுமை தோழர் கோபால், கல்வி மேலாண்மை குழு கருத்தாளர் முருகேசன், சீடு டிரஸ்ட் பெண்கள் ஒருங்கிணைப்பாளர் அம்சவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை