மேலும் செய்திகள்
பெ.ஆ.,கோவில் தடுப்பணையில் நீர் வரத்து குறைந்தது
29-Oct-2024
கரூர், நவ. 2-கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 13 ஆயிரத்து, 433 கன அடியாக இருந்தது. அதில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 213 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு பாசன வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 327 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 365 கன அடியாக அதிகரித்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில், 200 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 275 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 88.95 அடியாக இருந்தது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 29.44 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 23.81 அடியாக இருந்தது.நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மழை நிலவரம்கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில், கிருஷ்ணராயபுரத்தில் மட்டும், 10.60 மி.மீ., மழை பெய்தது.
29-Oct-2024