உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு வரத்தான 14,000 கனஅடி நீர்

மாயனுார் கதவணைக்கு வரத்தான 14,000 கனஅடி நீர்

கரூர், மாயனுார் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு, 15 ஆயிரத்து, 400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே உள்ள, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 14 ஆயிரத்து, 693 கன அடியாக இருந்தது. அதில், 13 ஆயிரத்து, 423 கன அடி தண்ணீர் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால்களில், 1,270 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 29.44 அடி கொண்ட அணை நீர்மட்டம், 21.60 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ