உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் வரும் 19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூர்,: 'கரூரில் வரும், 19 ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது' என, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 19 ல் காலை, 8:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. அதில், 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல் பட்டப் படிப்பு, தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.வேலைகோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களின் சுயவிபர குறிப்பு, கல்வி சான்றுகள், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். மேலும், www.tnprivatejops.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 97891-23085 என்ற மொபைல் எண்ணிலும், தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி