மேலும் செய்திகள்
சாக்கு மூட்டையில் மணல் கடத்திய பெண்கள் கைது
22-May-2025
கரூர்: கரூர் அருகே, ஆற்று மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே ஏமூர் புதுாரில், ஆற்று மணல் கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கரூர் மாவட்ட தனிப்படை போலீசார், ஏமூர் புதுாரில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை செய்தனர்.அப்போது ஆற்று மணல், 35 யூனிட் வரை கடத்தி மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆற்று மணலை கடத்தி மறைத்து வைத்ததாக கோவை மாவட்டம், சூலுாரை சேர்ந்த லாரி உரிமையாளர் சதாசிவம், 38, கரூர் மூக்காணங்குறிச்சியை சேர்ந்த லாரி ஓட்டுனர் சூர்யா, 34, ஆகிய இரண்டு பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு லாரிகள், ஒரு டயோட்டா எட்டீஸ் கார் மற்றும் 35 யூனிட் ஆற்று மணல் ஆகியவற்றையும், போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள லாரி உரிமையாளர் சதாசிவம் மீது, அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் பகுதிகளில், மணல் கடத்தியதாக வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
22-May-2025