உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக விற்பனை 200 மது பாட்டில் பறிமுதல்

சட்ட விரோதமாக விற்பனை 200 மது பாட்டில் பறிமுதல்

குளித்தலை, குளித்தலை அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்த, 200 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றின் அருகில், மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குளித்தலை போலீசார் கடந்த, 23ம் தேதி மாலை 6:30 மணியளவில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது மது பாட்டில்களை விற்பனை செய்த சிந்தலவாடி பஞ்., மேல விட்டுகட்டியை சேர்ந்த ராஜேஷ், 47, மாணிக்கவாசகம், 29, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 200 மதுபாட்டில்கள், 1 பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை