உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு 2,179 தேர்வர்கள் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு 2,179 தேர்வர்கள் பங்கேற்பு

கரூர்: கரூர், புனித தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல் நிலை தேர்வு, நேற்று நடந்தது. இதை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட காலியிடங்களை நிரப்ப குரூப்--1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாவட்டத்தில், 13 மையங்களில் குரூப்--1 மற்றும் குரூப்--1ஏ முதல்நிலை போட்டித்தேர்வு நடந்தது.இதில், 2,894 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், 2,179 பேர் தேர்வு எழுதினர். 715 பேர்கள் தேர்வு எழுத வரவில்லை. அனுமதி சீட்டு உள்ள தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல்போன், மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோக பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை