உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது

கரூர்:கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி பத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 34. இவருக்கு கடந்த, 2012ல் ஜோதி லட்சுமி, 28; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் முருகேசன், ஏற்கனவே திருமணமான, தேன்மொழி, 27; என்ற பெண்ணை கடந்த, 6 ல் திண்டுக்கல் மாவட்டம் பழனியில், இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த முதல் மனைவி ஜோதிலட்சுமி, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். மகளிர் போலீசார் முருகேசன், தேன் மொழி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ