மேலும் செய்திகள்
3 சிறந்த பள்ளிகளுக்கு விருது
10-Nov-2024
கரூரில் 3 அரசு பள்ளிகள்சிறந்த விருதுக்கு தேர்வுகரூர், நவ. 16-கரூர் மாவட்டத்தில், மூன்று அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், சிறந்த கற்றல், கற்பித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பள்ளிகளுக்கு, விருது வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டு, கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை பஞ்., யூனியனில் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளித்தலை பஞ்., யூனியனில் ஆதிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க.பரமத்தி பஞ்., யூனியனில் தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.இதையடுத்து, சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பரணிதரனுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் விருது வழங்கினார். தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி ஆசிரியர்கள் தெரசாமணி, சுமதி ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல், மற்ற இரண்டு பள்ளிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.
10-Nov-2024