உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை யூனியன் கூட்டம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை யூனியன் கூட்டம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றம்

குளித்தலை: குளித்தலை யூனியன் கூட்டரங்கில், நேற்று காலை, 11:30 மணிக்கு சாதாரண கூட்டம் நடந்தது. யூனியன் குழு தலைவர் விஜயவினாயகம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இளங்கோவன், யூனியன் கமிஷினர் ராஜேந்-திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, நகராட்சி பகுதியில், யூனியனுக்கு சொந்தமாக, 12 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் கட்டடங்கள் கட்டுதல், இடங்களை வாட-கைக்கு விடுதல், இதன் மூலம் வரும் வருவாயை யூனியன் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்துதல், யூனியனுக்கு சொந்த-மான இடங்களை மாற்று துறைக்கு வழங்கப்படாது என்பன உள்-ளிட்ட, 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் கவுன்-சிலர்கள் சந்திரமோகன், சங்கீதா, முருகேசன், கவுரி, அறிவழகன், சத்யா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை