உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 5 பேர் குண்டாசில் கைது

5 பேர் குண்டாசில் கைது

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தியது, யூரியா பதுக்கி கடத்தியது தொடர்பாக, ஐந்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை (சி.எஸ்.சி.ஐ.டி) போலீசார், ரேஷன் அரிசி கடத்தியதாக நால்வரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இதே போல் மத்திய அரசின் மானிய விலையிலான யூரியாவை கடத்தியதாக பவானியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி