உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது

குளித்தலை, குளித்தலை அருகே, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., வை.புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், 24. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை, பைக்கில் தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன், சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டு, வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நாப்பாளையம் பொது கழிப்பிடம் அருகே வந்த போது, அங்கு மறைந்திருந்த சிலர் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 5,500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி, மலையப்ப நகரை சேர்ந்த ஜீவானந்தம், கிருஷ்ணபிரசாத், பெரியபாலத்தை சேர்ந்த விஷ்ணு, தர்மா, சுரேந்தர் ஆகிய ஐந்து பேரை கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !