உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 6 சதவீத சொத்து வரி உயர்வு தீபாவளி பரிசு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கண்டனம்

6 சதவீத சொத்து வரி உயர்வு தீபாவளி பரிசு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கண்டனம்

6 சதவீத சொத்து வரி உயர்வு தீபாவளி பரிசுஅ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கண்டனம்கரூர், நவ. 6-'கரூர் மாநகராட்சியின், 6 சதவீதம் சொத்து வரி உயர்வு தீபாவளி பரிசு' என, அ.தி.மு.க., கரூர் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், தனது எக்ஸ் சமூக தளத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், கூறியிருப்பதாவது: மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி, அவர்கள் படும் துயரங்களை எண்ணி பார்க்காமல் மனம் போன போக்கில், தி.மு.க., ஆட்சி செயல்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சியில், தி.மு.க., பொறுப்பேற்றதில் இருந்தே ஏழை எளிய மக்களை வாட்டி, அவர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. ஏற்கனவே, 100 சதவீதம் முதல், 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது விடியா தி.மு.க., அரசு கரூர் மாவட்ட மக்களுக்கு தீபாவளி பரிசாக மேலும், 6 சதவீதம் வரி உயர்வை அளித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள, குடும்பங்களின் வருமானம் முழுவதுமே மின்கட்டணமாகவும், சொத்து வரியாகவும் அரசுக்கே செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதே நிலை நீடித்தால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை