உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நடமாடும் மருத்துவ முகாமில் பயன்பெற்ற 952 பேர்

நடமாடும் மருத்துவ முகாமில் பயன்பெற்ற 952 பேர்

கரூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில், நடமாடும் மருத்துவ முகாம் மூலம், 952 பேர் பயன் பெற்றுள்ளனர்.கரூர் மாவட்டம், புகழூரில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்படுகிறது. காகித நிறுவனம் சார்பில் கடந்த பிப்., 21ல், 50 கிராமங்களில் தினசரி நடமாடும் மருத்துவ முகாம் நடத்தும் பணி துவங்கியது. முகாமை, காகித நிறுவனத்தின் தலைவர் சந்தீப் சக்சேனா தொடங்கி வைத்தார். நேற்று, பொன்னியா கவுண்டன்புதுாரில் மருத்துவ முகாம் நிறைவு பெற்றது. மருத்துவ முகாம் மூலம், 952 பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு, காகித நிறுவனம் மூலம் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை