உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நீதிமன்ற பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

நீதிமன்ற பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

கரூர் : இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நீதிமன்ற ஊழியரிடம், செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.கரூர் மாவட்டம், முஷ்டகிணத்துப்பட்டியை சேர்ந்தவர் புவனா, 36. இவர். கரூர் நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறார். கரூர்-ஈசநத்தம் சாலையில் நல்லம்மாள் காளிப்பட்டி பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது. டூவீலரில் வந்த மர்ம நபர்கள், இவரது கழுத்தில் இருந்த, 4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி