உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிமென்ட் அட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்

சிமென்ட் அட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து டிரைவர் காயம்

கரூர், கரூர் அருகே, சிமென்ட் அட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில், டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.திருநெல்வேலி மாவட்டம், பனையங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சங்கர் பூரி, 40, லாரி டிரைவர். இவர் நேற்று நாமக்கல் மாவட்டம், மாணிக்க நத்தம் பகுதியில் உள்ள, நிறுவனம் ஒன்றில் இருந்து சிமென்ட் அட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு, கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில் நேற்று காலை லாரி சென்ற போது, திடீரென நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், லாரியில் சிக்கி காயங்களுடன் இருந்த டிரைவர் சங்கர் பூரியை, பொதுமக்கள் மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளத்தில் இருந்த லாரி மீட்கப்பட்டது. இதனால், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை