உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருமணமான பெண் விபரீத முடிவு கழுத்தை அறுத்து கொண்ட கள்ளக்காதலன்

திருமணமான பெண் விபரீத முடிவு கழுத்தை அறுத்து கொண்ட கள்ளக்காதலன்

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் பூக்குழி பகுதியை சேர்ந்தவர் மரம் வெட்டும் தொழிலாளி ரங்கன், 54. இவரது மகள் பிரியாவுக்கு, 24. கடந்த, 2019 செப்டம்பரில் இரும்-பூதிபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் கோவர்த்தினி என்ற மகள் உள்ளார். தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மகள் பிரியா தன் தாயார் வீட்டில் ஒன்றை ஆண்டுகளாக இருந்து வந்தார்.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, பிரியா திருச்சியில் உள்ள தனியார் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், இனுங்கூர் பஞ்., உப்புஆறு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், 21, என்பவருக்கும், இவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. திருச்சிக்கு வேலைக்கு சென்ற பிரியாவை, கடந்த மூன்று நாட்க-ளாக காணவில்லை. பிரியாவின் பெற்றோர் பல இடங்களில் தேடியும், விசாரித்தும் வந்தனர். சந்தோஷ்குமாரின் பெற்றோர் தனது மகனை காணவில்லை என, குளித்தலை போலீசில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தோஷ்குமார், தனது கள்ளக்கா-தலி பிரியாவுடன் ஓந்தாம்பட்டியில் உள்ள தன் நண்பர் ராஜா வீட்-டிற்கு இரவு நேரத்தில் சென்றுள்ளார்.அதிகாலையில், ராஜா வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் சேலையில் துாக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த சந்தோஷ்மார், தானும் கழுத்தில் கத்தியை கொண்டு அறுத்து ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் இருந்தார். இதைய-டுத்து, இந்த சம்வத்தை பார்த்த ராஜா, கிராம மக்களுக்கும், இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவித்துார்.சந்தோஷ்குமார் கழுத்தறுக்கப்பட்டு இருந்த நிலையில், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் உதய-குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பிரியா பிரேதத்தை கைப்பற்றி, உடல் கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இன்ஸ்பெக்டர் உதயகுமார், தற்கொலை தொடர்பாக, பிரி-யாவின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை