உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மொட்டை மாடியில் இருந்துதவறி விழுந்த வாலிபர் சாவு

மொட்டை மாடியில் இருந்துதவறி விழுந்த வாலிபர் சாவு

மொட்டை மாடியில் இருந்துதவறி விழுந்த வாலிபர் சாவுகரூர்:கரூர் அருகே, மொட்டை மாடி தடுப்பு சுவற்றில் அமர்ந்து, மொபைல் போன் பேசிய வாலிபர், தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், மண்மங்கலம் மேத்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ், 37; இவர் கடந்த, 17ல் அப்பிப்பாளையத்தில் உள்ள, உறவினர் தனம் என்பவரது வீட்டுக்கு சென்றார். பிறகு, அன்றிரவு வீட்டின், மொட்டை மாடி தடுப்பு சுவற்றில் அமர்ந்து கொண்டு, சுரேஷ் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த சுரேஷ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, சுரேஷ் தந்தை தங்கராஜ், 60, அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி