உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வடிகாலில் நாணல் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

வடிகாலில் நாணல் செடிகள் அகற்ற நடவடிக்கை தேவை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடியில், மழை நீர் வடிகால் செல்லும் கால்வாய் உள்ளது. இதன் வழியாக வரும் மழை நீர், நிலத்தடியில் உறிஞ்சும் வகையில் மழை நீர் சேமிப்பு குழிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் வீணாகாமல் நிலத்தடியில் சேமிக்கப்படுகிறது. இந்த நிலையில் மழை நீர் வரும் வடிகால் கால்வாய் முழுவதும், தற்போது நாணல் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் மழை காலங்களில், மழை நீர் முழுவதும் உறிஞ்சும் குழிகளில் சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, நாணல் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை