உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் கூடுதல் மின் விளக்கு தேவை

கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் கூடுதல் மின் விளக்கு தேவை

கரூர் :கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில், கூடுதல் மின் விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கரூர் அருகே, கோடங்கிப்பட்டி வழியாக திண்டுக்கல், ஈசநத்தம் மற்றும் பாகநத்தம் போன்ற பகுதிகளுக்கான சாலை செல்கிறது. இந்த சாலையில் பாகநத்தம் வரை, அதிகளவு கிராம பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் மின் விளக்குகள் குறைவாக உள்ளன. அதிலும், கிராம பிரிவு சாலையில் போதியளவு மின் வசதி இல்லை. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த பிரிவு சாலையில், கூடுதலாக மின் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ