ஈசநத்தம் சாலையில் கூடுதல் மின் விளக்குகள் தேவை
அரவக்குறிச்சி: ஈசநத்தத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் அதிகளவு கிராமப் பகுதிகள் உள்ளன. இந்த சாலையில், ஆங்காங்கே குறிப்பிட்ட துாரம் வரை, கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில், போதிய அளவு மின் விளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில், சிறிய சிறிய சாலை விபத்து நடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.எனவே, ஈசநத்தத்திலிருந்து கிராம பகுதிகளுக்கு பிரியும் இடத்தில், கூடுதலாக மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இப்பகுதியை பார்வையிட்டு மின் விளக்கு அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.