ரூ.57.26 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை சேர்த்து, 57 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததுநொய்யல் அருகே உள்ள, சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு விவசாயிகள், 4,639 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 36.19 ரூபாய், அதிகபட்சமாக, 49.66 ரூபாய், சராசரியாக, 44.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 1,690 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 71 ஆயிரத்து, 757 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 132.49 ரூபாய், அதிகபட்சமாக, 135.30 ரூபாய், சராசரியாக, 134.80 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 99.39 ரூபாய், அதிக-பட்சமாக, 128.66 ரூபாய், சராசரியாக, 125.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக 41 ஆயிரத்து, 918 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 51 லட்சத்து, 50 ஆயிரத்து, 526 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிலக்கடலை ஏலத்தில், 205 மூட்டை-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்-சமாக, 67.60 ரூபாய், அதிகபட்சமாக, 74.50 ரூபாய், சராசரியாக, 73.30 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,027 கிலோ எடை-யுள்ள நிலக்கடலை, ஐந்து லட்சத்து, 4,665 ரூபாய்க்கு விற்பனை-யானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்க-டலை சேர்த்து, 57 லட்சத்து, 26 ஆயிரத்து, 948 ரூபாய்க்கு விற்-பனை நடந்தது