மேலும் செய்திகள்
இயல்பை தாண்டிய கோடை மழை
26-May-2025
கரூர், நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து, கரூர் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளது.கரூர் மாவட்டத்தில், கடந்தாண்டு வட கிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்தது.வழக்கமாக, மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில், தென்மேற்கு பருவ மழை தொடங்கும். ஆனால், கரூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. கடந்த மே மாதத்தில் மழை பெய்தது. நடப்பு ஜூன் மாதத்தில், ஒரு சில நாட்கள் மட்டும் மழை பெய்துள்ளது.இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் இருந்து, குடிநீருக்காக வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக, அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.கரூர் மாவட்டம், முழுவதும் கடந்த சில நாட்களாக கோடையை போன்று வெயில் அடித்தது. தற்போது, கரூர் மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசி வருவதால், மழையை எதிர்பார்த்து, கரூர் மாவட்டத்தில் மானாவாரி விவசாய நிலங்களில் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது.குறிப்பாக, எண்ணை வித்து பயிர்கள் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கரூர் மாவட்ட விவசாயிகள், தென்மேற்கு பருவ மழை காலத்தில் அதிக மழை பெய்ய வேண்டும் என, வருண பகவானின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
26-May-2025